Kuala Lumpur, Malaysia

Today’s Hadith

Today’s Hadith


  January 30,2010 

அல்லாஹ்வின் திருப்தியை மட்டுமே நாடி நீர் எதைச் செலவு செய்தாலும் அதற்காகக் கூலி வழங்கப்படுவீர். உமது மனைவியின் வாயில் நீர் ஊட்டும் உணவு உட்பட” – நபி (ஸல்) நூல்: புகாரி

“கொடுமைக்குள்ளானவனின் முறையீட்டைக் குறித்து அஞ்சுங்கள். ஏனெனில், அவன் அல்லாஹ்விடம் தன் உரிமையையே கோருகின்றான். அல்லாஹ், உரிமையுடைய ஒருவனை உரிமை இழக்கச் செய்வதில்லை” – நபி(ஸல்) அறிவிப்பாளர் : அலீ (ரலி)

“இறந்தவர்களைத் திட்டாதீர்கள், ஏனெனில், அவர்கள் தம் செயல்களின் (விளைவுகளின்) பால் சென்றடைந்துவிட்டார்கள்” நபி (ஸல்) அறிவிப்பாளர் : ஆயிஷா (ரலி) – நூல்: புகாரி

“தன் இறைவனை நினைவு கூர்பவனுக்கும், அவனை நினைவு கூறாதவனுக்கும் உதாரணம் : உயிருள்ளவன், மரணித்தவன் போலாகும்” நபி(ஸல்) – நூல்: புகாரி

 

Newsletter Sign Up

For Latest Updates