Kuala Lumpur, Malaysia

சில பொன்மொழிகள்..

சில பொன்மொழிகள்..


  October 31,2010 

*மனிதனின் குற்றங்களில் பெரும்பாலானவை அவனது நாவிலிருந்துதான்
பிறக்கின்றன. -நபிகள் நாயகம். *

* உலகிற்கு ஏற்றாற் போல் தன்னை மாற்றிக்கொள்கின்றனர் பலர்; ஆனால் தனக்கு ஏற்றாற் போல், உலகையே மாற்றிக்கொள்கின்றனர் சிலர்- கலாம்

*தன்னை அதிக புத்திசாலியாக எண்ணுவதே மனிதனிடம் உள்ள மிகப் பெரிய
பலவீனம். -சிம்மன்ஸ் *

*உண்மையான செல்வாக்கை நாம் தேடிக் கொள்ளக் கூடாது. அது நம்மைத் தொடர்ந்து
வரவேண்டும். -மான்ஸ்பீல்டு.** *

*நம்முடன் வாழ்வோரைப் புரிந்து கொள்வதற்கு நம்மை நாமே முதற்கண் புரிந்து
கொள்வது அவசியம். -அன்னை தெரசா.*

*மின்மினிப் பூச்சி எவ்வளவு ஒளியுடன் திகழ்ந்தாலும் அது தீ ஆகாது.
-சாணக்கியர். *

*நம்பிக்கை குறையும் போது ஒவ்வொரு மனிதனும் நெறியற்ற கொள்கையை
மேற்கொள்கிறான். -ஜான்மில்டன்.*

*உண்மையான நட்பு ஆரோக்கியம் போன்றது.அதனை இழக்கும் வரை அதன் மதிப்பை நாம்
உணர்வதில்லை. -வோல்டன். *

*அவசரமாகத் தவறு செய்வதை விட தாமதமாகச் சரிவர செய்வது மேல். -ஜெபர்சன்.*

* உணர்வுகள் மாறலாம், நினைவுகள் மாறுவதில்லை – ஜோயல் அலெக்சாண்டர்

* அறிவாளிகள் சிறந்த எண்ணங்களை விவாதிக்கின்றனர், நடுத்தரமானோர் நிகழ்ச்சிகளை விவாதிக்கின்றனர், சாதாரணமானோர் மக்களை விவாதிக்கின்றனர்

* சொற்ப இரண்டு நாட்களிலேயே, நாளை என்பது நேற்று என்றாகி விடுகிறது.

* அனைத்துமே பூர்த்தியாகியிருக்க வேண்டும் முடிவில். அவ்வாறு இல்லையெனில் அது முடிவல்ல.

* நட்பு என்பது ஈரமான சிமெண்ட் கலவையில் கால் பதிப்பது போன்றது. சிறிது நேரம் நின்றால் (காலடிச்) சுவடுகளை விட்டுச் செல்வோம், அதிக நேரம் இருந்தால் விட்டுச் செல்ல இயலாது.

* சிந்தனை செய்யா மூளை, தேங்கிய சாக்கடை – யாரோ

* உலகத்திற்கு வேண்டுமென்றால் நீங்கள் ஒரு ஆளாக இருக்கலாம்; ஆனால் யாராவது ஒருவருக்கு நீங்களே உலகமாக இருக்கலாம்.

* நம்பிக்கைக்குரிய நணபருக்கு ஈடு இணையான செல்வம் ஏதுமில்லை

* இளமை என்பது வயதால் அல்ல, எண்ணங்களாலே அறியப்படுகிறது

* அடுத்த விளக்கிற்கு ஒளி ஏற்ற உதவுவதால், விளக்கின் ஒளி எவ்வகையிலும் குறைவதேயில்லை – எரின் மேஜர்ஸ்

* நான் தோல்வியுறவில்லை; மாறாக நான் கண்டுபிடித்த 10,000 வழிமுறைகளில் எதுவும் சரியில்லை – தாமஸ் ஆல்வா எடிசன்

* வாயைத் திறந்து பேசாத வரை ஒவ்வொரு மனிதரும் அறிவாளிகளே – ஆனென்

 

Newsletter Sign Up

For Latest Updates