உனக்காகவே நானென்றுஎனைநீ உச்சிமுகர்ந்தாயே
அத்தருணமே எனதுயிர் சாந்தி அடையக்கண்டேன்
நான்பிறக்க வரம்கேட்டாய் என்னைமணக்க வரம்கேட்டாய்
நமதன்பின்வெளிப்பாடாய் நம்வாரிசுகளின் வரம்கேட்டாய்
எத்தடையுமின்றி எல்லாமே கிடைத்தது
என்னவனே! எனக்கு வரமாக கிடைத்தவனே!
எனக்காக ஒருவரம் கேட்பாயா? இறைவனிடம்
என்விழிநீர் உன்னைத்தழுவ உன்மார்புக்குழிக்குள்
நான் முகம் புதைத்திருக்கும் வேளையில்
எனக்கு மரணம் நிகழவேண்டுமென்று…
அன்புடன் மலிக்கா.
இறைவனை நேசி இன்பம் பெறுவாய்
For Latest Updates